வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

Unmovable Files என்றால் என்ன?
இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை iஇடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவதுஅதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.டிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன. டிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.பேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel System Advanced tab Performance Settings Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

குறுக்குவழிகள்

Run கட்டளைகள்
iexplore
iexplore
outlook
msimn
winword
excel
realplay
calc
sol
freecell
control
mspaint
taskmgr
winrep
winmsd
gpedit.msc
msaccess
mplayer2
cleanmgr
dfrg.msc
devmgmt.msc
mmc.exe
explorer
themes
eudcedit, msinfo32.exe
services.msc
sndrec32
\boot.ini, control
dxdiag
sfc
compmgmt.msc
control userpasswords2
oobe/msoobe /aWindowsல் Start பட்டனை தட்டி பின் Run கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை டைப் செய்து விளைவை பார்க்கவும். பல புரோகிராம்களை இயக்குவதற்கு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் காற்புள்ளியோ( ; ) அல்லது முற்றுத்தரிப்போ( . ) இடப்படக்கூடாது.
iexplore - இண்டர்நெட் வெப் பிரவுசரை திறக்க
iexplore www.yahoo.com - யாகூ இணையதளத்தை திற்க்க
outlook - விண்டோஸ் microsoft office outlook ஐ திறக்க
msimn - விண்டோஸ் outlook express ஐ திறக்க
winword - Microsoft office word application ஐ திறக்க
excel - Microsoft office excel application ஐ திறக்க
realplay- Real Player ஐ திறக்க( Real Player இன்ஸ்டால் ஆகியிருந்தால் மட்டும் இக்கட்டளை பயன்படும். )இதேபோல் மேற்கூறிய கட்டளைகளை உபயோகித்து காலத்தை சுருக்கி மகிளுங்கள்.

தமிழில் கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர் கல்வியை தமிழில் அறிந்திட செய்வதே இந்த ப்ளாக் நோக்கமாகும் .
எனக்கு தெரிந்த சில மென்பொருள்களை பற்றி கூறுகிறேன்.